ஓராண்டாகியும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான சம்பளம் தரவில்லை – கஸ்தூரி குற்றச்சாட்டு

ஓராண்டாகியும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான சம்பளம் தரவில்லை – கஸ்தூரி குற்றச்சாட்டு

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு ஆண்டாகியும் தனக்கான சம்பளம் தரவில்லை என்று நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவம் வரும் அக்டோபர் 4-ந்தேதி முதல் ஆரம்பமாகிறது. வழக்கம் போல் நடிகர் கமல்ஹாசனே இந்த பருவத்தையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு ஆண்டாகியும் தனக்கான சம்பளம் தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே ஆதரவற்ற குழந்தைகளோட ஆபரே‌ஷன் செலவுக்காகத்தான். நான் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. ஆனால் இதிலும் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார். 

இதை கண்ட ரசிகர்கள் பலர் கஸ்தூரிக்கு ஆதரவாக கருத்து கூறினால் சிலரோ எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஓராண்டு கழித்து இப்படி ஒரு புகாரை கூறுவது ஏன்? இதுவும் வீண் விளம்பரத்திற்காகவா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan