கமலை தொடர்ந்து பிரபல நடிகருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்

கமலை தொடர்ந்து பிரபல நடிகருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், கமலை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.

மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மக்கள் விரும்பத்தக்கதுடர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களை இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தில் கமலே நாயகனாக நடிக்கிறார். அதன் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் மற்றொரு படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தொடர்பாக கடந்த வாரம் சிம்புவுடன் கமல் பேச்சுவார்த்தை நடத்தினாராம். சிம்புவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினாராம். தற்போது கேரளாவில் இருக்கும் சிம்பு தமிழ்நாடு திரும்பியதும் லோகேஷிடம் கதை கேட்க உள்ளாராம். 

சிம்பு அடுத்ததாக சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலில் நடக்க உள்ளது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan