விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்

விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்

விஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார்கள்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர். 

நேற்று மோசன் விளம்பர ஒட்டி வெளியான நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்) டுவிட்டரில் டிரெண்டாகி வந்தனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக, we stand with vijay Sethupathi என்ற ஹேஷ்டேகை போக்காக்கி வருகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan