பிக்பாஸ் வீட்டுக்கு புதுவரவு… வியப்பாக என்ட்ரி கொடுத்த பிரபலம் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டுக்கு புதுவரவு… வியப்பாக என்ட்ரி கொடுத்த பிரபலம் யார் தெரியுமா?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தில், 17-வது போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி வியப்பாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த பருவத்தில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், 17-வது போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரின் திடீர் என்ட்ரியை பார்த்து உற்சாகமடைந்த மற்ற போட்டியாளர்கள், அவரை கட்டியணைத்து வரவேற்றனர். 

தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் 4 துவக்க நிகழ்ச்சி அன்றே போட்டியாளராக உள்ளே வருவார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் அர்ச்சனா தொகுப்பாளராக பணிபுரியும் சேனல் நிர்வாகம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என தடை போட்டதால் அப்போது அவர் செல்லவில்லை. தற்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதால், தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan