காதல் திருமணம் தான் செய்வேன்- ராஷி கண்ணா

காதல் திருமணம் தான் செய்வேன்- ராஷி கண்ணா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷி கண்ணா, காதல் திருமணம் தான் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய திரைப்படத்தின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பட்சா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். 

அவர் அளித்த பேட்டி வருமாறு: “எனக்கு பயமே கிடையாது. எதுவாக இருந்தாலும் எதிர்த்து போராடுவேன். நான் எல்லோருடனும் சகஜமாக பழகுவேன். நெருக்கமான நண்பர்கள் என்று திரைப்படம் துறையில் யாரும் எனக்கு இல்லை. சிறுவயது தோழிகளுடன் மட்டும் பழகி வருகிறேன்.

 

திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்கிறார்கள். நேரம் வரும்போது மனதுக்கு பிடித்தவரை சந்தித்தால் வீட்டில் சொல்லி குடும்பத்தினர் ஒப்புதலோடு காதல் திருமணம் செய்து கொள்வேன். அதாவது காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்வேன்.” இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan