போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை

போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகினி கொடுத்த தகவலின் பேரில் அஜித் பட நடிகர் வீட்டில் விசாரணை நடைபெற்றுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் போதைப் பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் கர்நாடக திரை நட்சத்திரங்கள் மத்தியில் போதைப் பொருள் புழங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டு விட்டது. 

இந்த விசாரணை மத்தியக் குற்றப்பிரிவு இணை காவல் துறை கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போதைப் பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்தக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் அவர்களது நண்பர்கள் என 14 பேர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதி அளித்த தகவலின்பேரில் மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan