ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் –  பானு ஆதெய்யா காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் – பானு ஆதெய்யா காலமானார்

பழம்பெரும் பெண் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா நேற்று காலமானார். அவருக்கு வயது 91.

மும்பையை சேர்ந்த பழம்பெரும் பெண் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா, பல ஆண்டுகளாக நோய் வாய்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மும்பையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 91. 

அவரது உடல் தென்மும்பையில் உள்ள சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவர் 1956-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. திரைப்படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன்பிறகு சுமார் 50 ஆண்டு திரையுலக பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார்.

1990-ம் ஆண்டு வெளியான ‘லெக்கின்’, 2001-ம் ஆண்டு வந்த ‘லகான்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதையும் பெற்று உள்ளார். இதேபோல அவர் 1983-ம் ஆண்டு ரிச்சர்ட் அட்டென்பரோ இயக்கிய ‘காந்தி‘ என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கார் விருதை பெற்று இருந்தார். ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan