கொரோனா பாதிப்பால் மனைவி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த பிரபல பாடகர்

கொரோனா பாதிப்பால் மனைவி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த பிரபல பாடகர்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிக்கப்பட்டிருப்பதால் பிரபல பாடகர் தனது மனைவியை பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்திருக்கிறார்.

இந்தி திரையுலகில் முன்னணி பாடகராக இருப்பவர் குமார் சானு. இந்தியில் வெற்றி பெற்ற சாஜன் என்ற தமிழ் டப்பிங் படத்தில் தமிழிலும் பாடி இருக்கிறார். தெலுங்கு, மலையாளம், மராத்தி, போஜ்புரி உள்பட பல மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி புகழ்பெற்ற பாடகராக உள்ளார். 

2009-ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்த நிலையில் குமார் சானுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவருக்கு வயது 62. குமார் சானுவின் முகநூல் பக்கத்தில், துரதிர்ஷ்டவசமாக குமார் சானுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் குணமடையை பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

வருகிற 30-ந் தேதி தனது மனைவியின் பிறந்த நாளை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்தோடு கொண்டாட குமார் சானு திட்டமிட்டு இருந்தார். கொரோனா பாதிப்பினால் அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan