பிரியா ஆனந்தை நெகிழ வைத்த ரசிகர்கள்

பிரியா ஆனந்தை நெகிழ வைத்த ரசிகர்கள்

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் பிரியா ஆனந்தை கன்னட ரசிகர்கள் நெகிழ வைத்திருக்கிறார்கள்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் சேத்தன் குமார் இயக்கத்தில் ஜேம்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இதில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக பிரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் ஹம்பியில் நடந்து வரும் படப்பிடிப்பில் பிரியா ஆனந்த் கலந்து கொண்டுள்ளார். புனித் ராஜ்குமார் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ராஜகுமாரா படம் மூலம் தான் பிரியா ஆனந்த் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

ஜேம்ஸ் படத்தில் நடிப்பது பற்றி பிரியா ஆனந்த் கூறியிருப்பதாவது, ராஜகுமாரா படம் போன்றே ஜேம்சும் கமர்சியல் பேமிலி என்டர்டெய்னர். என் கதாபாத்திரம் சுவாரசியமானது. மீண்டும் புனித் ராஜ்குமாருடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜகுமாராவில் எங்கள் ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இம்முறை என் செல்ல நாயும் சில காட்சிகளில் வரும். 

ஜேம்ஸ் பட செட்டில் மக்கள் எங்களை ராஜகுமாரா, ராஜகுமாரி என்று அழைத்தார்கள். இது முதல் முறை அல்ல. நான் கோவாவுக்கு சென்றபோது கூட என்னை புனித் ராஜ்குமார் பட ராஜகுமாரி என்று மக்கள் அழைத்தார்கள். கன்னட ரசிகர்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். ஊரடங்குக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதனால் ஜேம்ஸ் படப்பிடிப்பில் நம்பிக்கையுடன் கலந்து கொள்கிறேன் என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan