மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை

மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை

மக்கள் விரும்பத்தக்கதுக் அணியாமல் சுற்றுலா சென்ற பிரபல நடிகையிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 

அப்போது அங்கு முகக்கவசம் இன்றி வந்த நடிகை அதிதி பாலனிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

பின்னர் அதிதி பாலன் 200 ரூபாயை அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் நடிகை அதிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சில மணி நேரம் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan