புதிய அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

புதிய அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்த வரலட்சுமி சரத்குமார், “கண்ணாமூச்சி” படம் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் ” மெர்சல்”. இது இந்த நிறுவனம் தயாரித்த 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் அடுத்ததாக “கண்ணாமூச்சி” என்ற படத்தை தயாரிக்கிறது. 

பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்த வரலட்சுமி சரத்குமார், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான். ” கண்ணாமூச்சி” படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan