முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்த கவுதம் மேனன்

முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்த கவுதம் மேனன்

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நவரசா’ என்ற வெப் தொடரில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்து வருகிறார். 9 தொடர்கள் கொண்ட இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், சித்தார்த், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர். இந்த வெப் தொடரின் மூலம் நடிகர்கள் சித்தார்த், அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

சூர்யா, விஜய் சேதுபது, பார்வதி, சினேகா, ஜெய் ஆகியோர் இந்த வெப் தொடரில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில், இந்த வெப் தொடரில் இயக்குனர் கவுதம் மேனனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கார்த்திக்  சுப்புராஜ் இயக்கத்தில் கவுதம் மேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan