காதல் மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ராணா

காதல் மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ராணா

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா தனது காதல் மனைவி மிஹீகாவுடன் ஹனிமூன் சென்றுள்ளாராம்.

ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் மிஹீகா தனது சமூக வலைதள பக்கத்தில் தங்களது தேன் நிலவு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் கடற்கரையில் ஹாயாக படுத்தபடி பாவனை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த புகைப்படம் எந்த இடத்தில் வைத்து எடுக்கப்பட்டது என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan