ரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் – பொண்ணு யார் தெரியுமா?

ரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் – பொண்ணு யார் தெரியுமா?

பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷூக்கு, ரகசியமாக திருமணம் நடந்துள்ளது.

தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அவதாரமெடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

அவருக்கும், தொடர் நடிகை திவ்யாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது திருமணம் நின்று போனது.

இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், திரைப்படம் பைனான்சியரான மது என்பவருக்கும்  கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. அந்த திருமண விழாவில் வெறும் 15 பேர் தான் கலந்து கொண்டார்களாம். இந்த தகவல் கசிந்ததை அடுத்து, தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என ஆர்.கே.சுரேஷ் பதிவிட்டுள்ளார்..

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan