பிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்…. தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா?

பிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்…. தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தை நடிகை சமந்தா சில வாரங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவம், சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னணி நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் பருவம் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 3-வது பருவத்தையும் தற்போது நடந்து வரும் 4-வது பருவத்தையும் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 3-வது சீசனின் போது நாகார்ஜுனா சில காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan