விளம்பர ஒட்டி வேண்டாம்…. மக்கள் பணி தொடரட்டும் – விஜய் அறிவுரை

விளம்பர ஒட்டி வேண்டாம்…. மக்கள் பணி தொடரட்டும் – விஜய் அறிவுரை

மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில், நடிகர் விஜய் திடீரென மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.  

அந்த கூட்டத்தில், மாவட்ட நற்பணி மன்றங்கள் தன்னை அரசியலில் தொடர்புப்படுத்தி விளம்பர ஒட்டிகள் ஒட்டுவதை அவர் கண்டித்ததாகவும், அத்தகைய விளம்பர ஒட்டிகள் ஒட்டுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என அறிவுறுத்திய விஜய், வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் என உறுதியளித்தாராம்.

மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அரசியல் கட்சி அல்லது தேர்தல் குறித்த ஏதேனும் ஆலோசனைகள் நடந்தினாரா என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வரும் நாட்களில் மற்ற மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan