ஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன – கங்கனா ரணாவத் சாடல்

ஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன – கங்கனா ரணாவத் சாடல்

ஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளதாகவும், அவற்றுக்கு தணிக்கை முக்கியம் எனவும் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அனைத்து மொழி படங்களும் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. வெப் தொடர்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் ஆபாச காட்சிகள் தாராளமாக உள்ளன என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இரட்டை அர்த்தம் கொண்ட வாசகங்களோடு சல்மான்கான், ரன்வீர்சிங், கேத்ரினா கைப் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட மீம்ஸ்கள் பகிரப்பட்டன. 

இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கங்கனா ரணாவத் தனது டுவிட்டரில் பகிர்ந்து கூறும்போது, “திரையரங்குகளில் எல்லோரும் படம் பார்க்கும் அனுபவம் அலாதியானது. டிஜிட்டலுக்கு கலை மாறி வரும் நெருக்கடியை பார்க்கிறோம். ஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன. திரைப்படங்களை குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பார்ப்பது சமூக அனுபவம். எல்லோரும் சேர்ந்து படம் பார்ப்பதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும். படங்களுக்கு தணிக்கை முக்கியம். தணிக்கை என்பது நமது மனசாட்சி” என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan