ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை – நலமுடன் இருப்பதாக டுவிட்

ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை – நலமுடன் இருப்பதாக டுவிட்

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்டு, தான் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், மருத்துவ குழுவுக்கு நன்றி. நான் தற்போது அருமையாக உணர்கிறேன். ஏற்கனவே கிளீவ்லேண்டின் தெருக்களில் உள்ள அற்புதமான சிலைகளை கண்டுகளித்தவாறு நடைபயிற்சி செய்தேன். எனக்கு சேவை செய்த செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி” என கூறி உள்ளார்.

மேலும் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், நடைபயிற்சி செய்த போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan