பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்

பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கிறார்கள்.

நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார். 

அறிமுக இயக்குனர் சந்துரு என்பவர் இயக்கும் திரில் மர்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் சாண்டி நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் சாண்டியுடன் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட சரவணன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.

பிக் பாஸ் பருவம் 3 நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்த சாண்டி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க உள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan