கமல் இன்றி தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு

கமல் இன்றி தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம்.

இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தினர். அதன்பிறகு கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு முடங்கியது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியானது. இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியதாக பேசப்பட்டது. இதனை பட நிறுவனம் மறுத்தது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பை அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

கமல்ஹாசன் இல்லாமல் படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்குகின்றனர். தேர்தல் பணிகள் முடிந்ததும் தனது காட்சிகளை ஒரேகட்டமாக நடித்து கொடுப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan