பிக்பாஸ் என்னை மட்டும் அழைக்கவில்லை – சுரேஷ் சக்ரவர்த்தி

பிக்பாஸ் என்னை மட்டும் அழைக்கவில்லை – சுரேஷ் சக்ரவர்த்தி

பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகிய 6 போட்டியாளர்களில், பிக்பாஸ் தலைப்பை ஜெயிக்கப்போவது யார் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும். இந்நிலையில், இதுவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் செல்லவில்லை. 

இதையடுத்து ரசிகர் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தியிடம், ஏன் நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லவில்லை என கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி, இதுவரை தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறினார். சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan