விஜய் சேதுபதி பட இயக்குனருடன் இணையும் சசிகுமார்

விஜய் சேதுபதி பட இயக்குனருடன் இணையும் சசிகுமார்

தமிழ் திரைப்படத்தில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறார்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் நடிகர் சசிகுமார் கலந்துக் கொண்டார். அதன்பின் பேசிய சசிகுமார், இந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் கிராமத்தில் பிறந்து இப்போதும் அங்கேயே வாழ்ந்து வருவதால் அந்த மண் மணம் குறையாமல் இன்றளவும் அத்தனை பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். இன்றைக்கும் கூட பொங்கல் பண்டிகை என்றால் எங்கள் வீட்டு மாட்டு தொழுவத்தில் தான் பொங்கல் வைத்து வணங்குவது வழக்கம். பரம்பரை பரம்பரையாக இன்னமும் அந்த பழக்கத்தை மாற்ற வில்லை.

கொரோனா பலரது வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது அதை மறுக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை திரையரங்கில் பார்க்கும் திரைப்படம் என்பது கோவிலில் இருக்கும் சாமியை பார்ப்பதற்கு சமம். ஓடிடி என்பது வீட்டில் இருக்கும் பூஜை அறை போல.

வீட்டில் இருக்கும் சுவாமியை தினம்தினம் பூஜித்தாலும் கோயிலுக்கு போகும் போது ஏற்படும் மகிழ்ச்யை போல திரைப்படத்தை திரையரங்கில் கண்டு களிப்பது தான் ரசிகனாகவும் கலைஞனாகவும் நான் விரும்புகிறேன். எனது அடுத்த படங்களாக ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உட்பட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

அடுத்ததாக தொரட்டி இயக்குனர் மாரிமுத்து இயக்கத்திலும், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘க/பெ.ரணசிங்கம் பட இயக்குனர் விருமாண்டி இயக்கத்திலும் நடிக்க இருக்கிறேன்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan