ஆரிக்கு இசை ஆல்பம் வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

ஆரிக்கு இசை ஆல்பம் வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பிக்பாஸ் ஆரிக்கு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் பருவம் – 4ல் யார் வெற்றியாளர் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. இந்த போட்டியில் வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் தக்கவைத்திருப்பவர் நடிகர் ஆரி. முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு உருவாகியுள்ளது.

இந்தநிலையில் நட்பு அடிப்படையில் ஆரிக்காக ‘ஆரி வேற மாறி’ என்ற லிரிக்கல் இசை ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளார் சி.சத்யா. ‘ஆரி வேற மாறி’ சிங்கிள் டிராக் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் ஆரி ஏற்கனவே சி.சத்யா இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ ‘உன்னோடு கா’ படத்தில் நாயகனாக நடித்தவர். தற்போது இந்த கூட்டணி ‘அலேகா’ படத்திலும் இணைந்துள்ளது.  

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan