‘மாறா’ படத்துக்காக சுவர்களில் நூதன ஓவிய விளம்பரங்கள்

‘மாறா’ படத்துக்காக சுவர்களில் நூதன ஓவிய விளம்பரங்கள்

மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள மாறா படத்தை சுவர் ஓவியங்கள் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளனர்.

திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ள ‘மாறா’ படம் அமேசான் பிரைம் காணொளி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு உலகம் முழுவதும் விமர்சகர்கள் மற்றும் திரைப்படம் ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

மாறா படத்தில் அலெக்சாண்டர் பாபு, சிவாடா, பத்மாவதி, அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். புரமோட் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரதீக் சக்கரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மாறாபடத்தை 240 நாடுகளிலும், பிராந்தியங்களிலும் அமேசான் பிரைம் காணொளி ஒளிபரப்பு செய்கிறது. மாறா படத்துக்காக சென்னை மற்றும் கோயம்புத்தூர் தெருக்களில் நூதன முறையில் ஓவிய விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன. சென்னையை சேர்ந்த கலைஞர்கள் கிறிஸ் பிளேர் வின்சென்ட் மற்றும் லோட்டஸ் ஹெட் ஆகியோரால் இந்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. 

பேனர்களிலும் மாறா படத்தின் ஓவிய விளம்பரம் செய்து நகரத்தை அழகுபடுத்தி உள்ளனர். மாறா படத்தின் கதை சாரத்தை அந்த ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஓவியங்கள் சென்னையில் பெசன்ட் நகர், எழும்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் வரையப்பட்டு உள்ளன. இந்த மாறா ஓவியங்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan