நடிகை கங்கனாவை கைது செய்ய நீதிமன்றம் தடை

நடிகை கங்கனாவை கைது செய்ய நீதிமன்றம் தடை

தேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருதுக்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்றும் காவல் துறை விசாரணை நடத்தினால் முன்னணி நடிகர்கள் சிக்குவார்கள் என்றும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் சாடினார். இதையடுத்து அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. இதனால் மும்பையில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறிய அவர் பல மாதங்களுக்கு பின்பு மீண்டும் மும்பை திரும்பி இருக்கிறார்.

இந்த நிலையில் கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக காவல் துறையினர் தேச துரோக வழக்கு பதிவு செய்து நேரில் அழைத்து 2 மணிநேரம் விசாரித்தனர். இதையடுத்து தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கனாவும், ரங்கோலியும் மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 25-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதுவரை கங்கனா மற்றும் ரங்கோலியை விசாரிக்கவும், கைது நடவடிக்கை எடுக்கவும் தடைவிதித்து உத்தரவிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan