காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு…. காவல் துறை தீவிர விசாரணை

காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு…. காவல் துறை தீவிர விசாரணை

பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கராவின் உடல் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் நடத்தி வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கரா. இவர் இங்கிலீஸ் மீடியம், காக்‌ஷி அம்மினி பில்லா, மழமேகப்ரவுள், ரமணம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். முத்தப்பன் என்ற மலையாள தொலைக்காட்சி தொடரிலும் நடித்து புகழ் பெற்றார். 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஜனார்த்தனன் கேரள மாநிலம் தலச்சேரியில் வசித்து வந்தார். ஜனார்த்தனனை திடீரென்று காணவில்லை. குடும்பத்தினர் அவரை தேடினார்கள். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மூடப்பட்டு இருந்த வலை திறந்து இருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தபோது ஜனார்த்தனன் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சியானார்கள். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜனார்த்தனன் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்று காவல் துறையினர் விசாரிக்கிறார்கள். மரணம் அடைந்த ஜனார்த்தனத்துக்கு வயது 60. திருமணம் ஆகவில்லை. அவரது மறைவு மலையாள பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan