மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி

மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் சிரஞ்சீவி நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப விவரங்கள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan