வலிமை அப்டேட் கேட்டு முருகனிடம் வேண்டுதல்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

வலிமை அப்டேட் கேட்டு முருகனிடம் வேண்டுதல்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ பட அப்டேட் வேண்டி முருகனிடம் வேண்டுதல் செலுத்திய ரசிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

 இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். சமீபத்தில், கடினமாக உழைக்கும் அஜித் குமாரும், தயாரிப்பாளர் போனி கபூரும் நிச்சயமாக படத்தின் அப்டேட்டைக் கொடுப்பார்கள். அதுவரை, ரசிகர்கள் தயவுசெய்து பொறுமையாக இருக்கும்படி அஜித் தரப்பில் அறிவிப்பு வந்தது. 

 தற்போது தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என சுவரொட்டி எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan