கீர்த்தி சுரேஷுக்கு சவால் விட்ட மீனா

கீர்த்தி சுரேஷுக்கு சவால் விட்ட மீனா

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு சவால் விடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களின் மூலமாக புதிய புதிய சவால்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். 

விஜய், மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் என தமிழ், தெலுங்கு திரைப்படம் பிரபலங்கள் இந்த சவாலில் பங்கேற்றனர். இந்நிலையில் நடிகை மீனாவும் இந்த சவாலில் பங்கெடுத்து மரம் நட்டு படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், மஞ்சு வாரியர் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இந்த சவாலை ஏற்கும் படி கூறி இருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan