சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்

சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்

சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த நடிகர் மரணமடைந்தது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான அந்தாலஜி படம் சில்லுக்கருப்பட்டி. இதில் மூன்றாவது கதையில் லீலா சாம்சன் ஜோடியாக நவனீதனாக நடித்தவர் ஸ்ரீராம். தற்காப்பு கலையின் நிபுணராக இருக்கும் ஶ்ரீராம், இன்று பயிற்சி செய்யும் போது தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல்துறையினருக்கு ஶ்ரீராம் தற்காப்பு கலையை கற்பித்து வந்தார். தவிர பெண்களின் பாதுகாப்புக்கான பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். ஹலிதா ஷமீமின் சில்லு கருப்பட்டி படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan