சைக்கிளில் 400 கி.மீ. பயணம் – ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு

சைக்கிளில் 400 கி.மீ. பயணம் – ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஆர்யா, சைக்கிளில் 400 கி.மீ. பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அத்துடன் மிதிவண்டி பந்தய வீரராகவும் இருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உள்ளார். 

கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி மிதிவண்டி சவாரி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் 100 கி.மீ. வரை மிதிவண்டி பயணம் செய்ததாக கூறி இருந்தார். 

இந்த நிலையில் தற்போது 400 கி.மீ. தூரம் மிதிவண்டி பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்யாவின் மிதிவண்டி பயண சாதனையை நடிகர் விவேக்கும் டுவிட்டரில் பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆர்யா, உங்களின் 400 கி.மீ. மிதிவண்டி பயணத்துக்கு வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கும் உந்துதலாக இருக்கிறீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். விவேக் பாராட்டுக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan