பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா

பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா

பிக்பாஸ் 3-வது பருவத்தில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட தர்ஷனும், லாஸ்லியாவும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம்.

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் மறுதயாரிப்பு ஆகிறது. இதில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம். 

மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். இப்படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை லாஸ்லியா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரும் இப்படத்தின் நாயகன் தர்ஷனும் பிக்பாஸ் 3-வது பருவத்தில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan