ரம்யா பாண்டியனை தொடர்ந்து சூர்யா படத்தில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி

ரம்யா பாண்டியனை தொடர்ந்து சூர்யா படத்தில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி

சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படத்தில், மேலும் ஒரு கதாநாயகி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

இந்நிலையில், நடிகர் சூர்யா அடுத்ததாக தயாரிக்கும் படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்ட ரம்யா பாண்டியன் இப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

அவருடன் இணைந்து, பல்வேறு படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்து வரும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம். பாடகர் க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். 

பட பூஜையின் போது எடுத்த புகைப்படம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. இதில் படக்குழுவினருடன்  ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன்,  தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குனர் ஜே.ஜே ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan