‘எனிமி’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை

‘எனிமி’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் எனிமி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள். 

இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிர்ணாளினி நடிக்க உள்ளதாக அறிவித்த படக்குழு, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பதை வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில், எனிமி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத் தாக்க போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan