விஷாலின் ‘சக்ரா’ வெளியீடு தேதி அறிவிப்பு

விஷாலின் ‘சக்ரா’ வெளியீடு தேதி அறிவிப்பு

எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார். 

இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது முடிவை மாற்றி திரையரங்கில் வெளியிட முன்வந்துள்ளனர். அந்த வகையில் இப்படம் வருகிற பிப்ரவரி 19-ந் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan