மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க… சுல்தான் கார்த்தி

மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க… சுல்தான் கார்த்தி

மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க சார் என்று சுல்தான் பட விளம்பரத்தில் கார்த்தி சொல்லும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

பிரம்மாண்ட வரவு செலவுத் திட்டத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று வெளியிடுவதாக அறிவித்தார்கள்.

அதன்படி இன்று வெளியான விளம்பரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் மகாபாரதத்தை போர் இல்லாம படுச்சு பாருங்க சார் என்று கார்த்தி சொல்லும் வசனம் கவனம் பெற்றிருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan