திருமண நாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட மகத்

திருமண நாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட மகத்

மாடல் அழகி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் மகத், திருமண நாளில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் ‘மங்காத்தா’, விஜய்யின் ’ஜில்லா’, சிம்புவின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் மகத். இதைத் தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாம் பருவத்தில் மகத் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

மகத்தும் பிரபல மாடல் ஆழகி பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இதில் மகத்தின் நண்பர் சிம்பு உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இன்று திருமண நாள் கொண்டாடும் இவர்கள், ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர். பிராச்சியின் வயிற்றை முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்ட மகத், “நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் குழந்தை வருகிறது. இந்த சிறந்த பரிசுக்கு நன்றி பிராச்சி மிஸ்ரா. லவ் யூ” என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan