ஆதரவற்ற முதியவர்களுக்காக களமிறங்கிய சோனு சூட்

ஆதரவற்ற முதியவர்களுக்காக களமிறங்கிய சோனு சூட்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நகராட்சி ஊழியர்களால் துன்புறுத்தப்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு ஆதரவாக சோனு சூட் களமிறங்கி இருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை ஒரு சூப்பர் கதாநாயகனாக புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்ற முதியவர்கள் சிலரை நகராட்சி ஊழியர்கள், ஒரு பார வண்டியில் அடைத்து இந்தூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலை அருகே முரட்டுத்தனமாக இறக்கிவிடும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதைப்பார்த்த சோனு சூட், ”சில முதியவர்களை நகரிலிருந்து கொண்டு போய் புறநகர்ப் பகுதியில் இறக்கி விடுவதாக ஒரு செய்தி என் கண்ணில் பட்டது. அவர்களுக்கு ஒரு வீட்டை உருவாக்கித் தர இந்தூரில் இருக்கும் சகோதர, சகோதரிகள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடைய உரிமையை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். மேலும், அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும், தங்க வீடும் வழங்க விரும்புகிறேன். உங்களுடைய உதவி இல்லாமல் இதை என்னால் செய்ய இயலாது. வயதான தங்கள் பெற்றோரைக் கைவிடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்”

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan