பிக்பாஸ் பாலாஜியின் தந்தை மரணம்

பிக்பாஸ் பாலாஜியின் தந்தை மரணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ், அவரின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தில் கலந்துகொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில், பாலாஜியின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் பாலாஜிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர். 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாலாஜி, இதுவும் கடந்து போகும் என குறிப்பிட்டுள்ளார். பாலாஜியின் தந்தை மறைவிற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலாஜியின் அம்மா சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan