விரைவில் இயக்குனராகும் வலிமை பட தயாரிப்பாளர்

விரைவில் இயக்குனராகும் வலிமை பட தயாரிப்பாளர்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், விரைவில் இயக்குனராக உள்ளாராம்.

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் தற்போது தென்னிந்திய மொழி படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில், தமிழில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தயாரித்தார். தற்போது அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தையும் அவரே தயாரிக்கிறார்.

இந்நிலையில், விரைவில் இயக்குனராக உள்ளதைப் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார் போனி கபூர். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “எனக்கு திரைப்படம் இயக்க விருப்பம். 25 வயதில் இருந்து திரைப்படங்கள் தயாரித்து வருகிறேன். இது நான் படம் இயக்குவதற்கான நேரம் என்று நினைக்கிறேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்”. இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan