வெற்றிமாறன் படத்துக்காக புதிய ஸ்டூடியோவில் பாடல் பதிவு செய்யும் இளையராஜா

வெற்றிமாறன் படத்துக்காக புதிய ஸ்டூடியோவில் பாடல் பதிவு செய்யும் இளையராஜா

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கான பாடல் பதிவு பணிகளை இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் மேற்கொள்ள உள்ளாராம்.

பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைத்து வந்த இளையராஜா, சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டூடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரை, தற்போது தனது புதிய ரிக்கார்டிங் ஸ்டூடியோவாக இளையராஜா மாற்றி இருக்கிறார். இந்த ஸ்டூடியோவில் முதல் முறையாக வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கான பாடல் பதிவை இளையராஜா இன்று தொடங்குகிறார். 

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார். சூரி காவல் துறை கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன், இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan