கதையை விட கதாநாயகன் பெரிய ஆளாக இருக்க கூடாது – விஷமக்காரன் இயக்குனர்

கதையை விட கதாநாயகன் பெரிய ஆளாக இருக்க கூடாது – விஷமக்காரன் இயக்குனர்

கதையை விட கதாநாயகன் பெரிய ஆளாக இருக்க கூடாது என்று விஷமக்காரன் பட இயக்குனர் பட விழாவில் பேசி இருக்கிறார்.

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்). அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ தொடர் புகழ் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர்.

மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கையாளுதல் என்பது அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கூட உருவாக்கும். அந்தவகையில் இந்தப்படத்தின் கதையே மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல் என்கிற மையக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் நாயகனும் இயக்குனருமான வி (விஜய்) பேசும்போது, “இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், பாடகர் என மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளேன். திரைப்படம் எடுக்கிறோம் என முடிவு செய்ததுமே ஏதாவது புதிய விஷயத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க நினைத்தபோது தோன்றியதுதான் இந்த விஷமக்காரன் படத்தின் கதை. இதில் கதாநாயகனாக நடிப்பது சாதாரணம் என நினைத்தேன்.. ஆனால் கதாநாயகனை வைத்து தான் இந்தப்படத்தின் மொத்த கதையுமே நகர்கிறது. அப்போது தான் கதாநாயகனாக நடிப்பதன் கஷ்டம் தெரிந்தது.

இங்கே சத்யம் திரையரங்கத்தில் இந்த விழாவுக்காக வந்தபோது கூட, தேர் பார்க்கிங்கில் கதாநாயகன் யார் என விசாரித்தார்கள். யாரோ புது கதாநாயகன் என சொன்னேன்.. உடனே தேரை அப்படி ஓரமா கொண்டுபோய் பார்க் பண்ணுங்க என சொன்னார்கள். கதாநாயகனாக இருந்தால் தான் திரையரங்கம் பார்க்கிங்கிலேயே மரியாதை தருகிறார்கள். இங்கே கதைகூட முக்கியமில்லை.. கதாநாயகன்தான் முக்கியம்.. ஆனால் என்னை பொறுத்தவரை கதையை விட கதாநாயகன் பெரிய ஆளாக இருக்க கூடாது என்றுதான் சொல்வேன். என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan