‘வலிமை’ அப்டேட் சொல்லுங்க தல… அஜித்தை நேரில் சந்தித்து கேட்ட ரசிகர்

‘வலிமை’ அப்டேட் சொல்லுங்க தல… அஜித்தை நேரில் சந்தித்து கேட்ட ரசிகர்

அஜித்தை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர் அவரிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதற்கு பின், எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. குறிப்பாக இப்படத்தில் அஜித்தை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட இதுவரை தெரிவிக்கவில்லை. 

இதுவரை எந்த அப்டேட்டும் தராத தயாரிப்பாளர் போனி கபூரை கண்டித்து விளம்பர ஒட்டி ஒட்டிய சம்பவங்களும் அரங்கேறின. இவை எல்லாத்துக்கும் மேல், தற்போது அஜித்திடமே ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். 

சமீபத்தில் அஜித், இந்தியா முழுதும் சுமார் 10,000 கி.மீ தூரம்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கிலேயே பயணம் செய்தார். அந்த பயணத்தின் போது ரசிகர்கள் பலர் அவரை சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். 

அப்போது ரசிகர் ஒருவர் அஜித்திடம் வலிமை அப்டேட் கேட்டாராம். இதைக்கேட்டு சிரித்த அஜித் ‘மிக விரைவில்’ என கூறிவிட்டு சென்றதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan