கவின் படத்தில் சின்னத்திரை பிரபலம்

கவின் படத்தில் சின்னத்திரை பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை பெற்ற கவின் நடித்துவரும் புதிய படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் இணைந்து நடித்து வருகிறார்.

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் பவித்ராவும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பவித்ரா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பவித்ராவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan