கொரோனாவால் நஷ்டம்… நடன பள்ளியை மூடிய பிரபல நடிகை

கொரோனாவால் நஷ்டம்… நடன பள்ளியை மூடிய பிரபல நடிகை

கொரோனா லாக்டவுன் காரணமாக நஷ்டம் ஏற்பட்டதால், நடிகை ரீமா கல்லிங்கல் தான் நடத்தி வந்த நடன பள்ளியை மூடியுள்ளார்.

தமிழில் பரத் ஜோடியாக யுவன் யுவதி படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். ஜீவாவின் கோ படத்திலும் நடித்துள்ளார். மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதும் பெற்றுள்ளார். மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை திருமணம் செய்து கொண்டார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரீமா கல்லிங்கல் நடன கலைஞர். 

சில வருடங்களுக்கு முன்பு சொந்தமாக மாமாங்கம் ஸ்டூடியோ என்ற பெயரில் நடன பள்ளி தொடங்கினார். அங்கு ஏராளமானோருக்கு குச்சிபுடி நடன பயிற்சிகள் அளித்து வந்தார். தற்போது கொரோனாவால் பயிற்சிக்கு யாரும் வரவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து நடன பள்ளியை மூடுவதாக ரீமா கல்லிங்கல் அறிவித்து உள்ளார். 

சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடன பள்ளியை மூடுகிறேன். நடன வகுப்புகள், நடன பயிற்சிகள், திரைப்படங்கள் திரையிடுதல், கருத்தரங்கு என்று இந்த பள்ளியில் மறக்க முடியாத நினைவுகள் நிறைய உள்ளன” என்று கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan