உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் – ராய் லட்சுமி

உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் – ராய் லட்சுமி

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராய் லட்சுமி, உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று கூறி இருக்கிறார்.

நடிகை ராய் லட்சுமி சமீபத்தில் கொரோனாவில் சிக்கி சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“கொரோனா எல்லோருக்கும் நிறைய பாடம் கற்றுக்கொடுத்து இருக்கிறது. சமூகத்தில் யார் எதை செய்ய வேண்டும். எதை செய்ய கூடாது என்பதையும் உணர வைத்துள்ளது. மனிதாபிமானமும், அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதும் அதிகமாகி இருக்கிறது. திரைப்படம் துறை மட்டுமன்றி எல்லா துறைகளில் இருப்பவர்களையும் தம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று உணர வைத்து இருக்கிறது. 

கொரோனா கற்றுக்கொடுத்த பாடத்தை எப்போதும் மறக்கக்கூடாது. எல்லோருமே எதை மறந்தோமோ அதை கொரோனா ஞாபகப்படுத்தி விட்டுப் போய் இருக்கிறது. கொரோனாவை திட்டுவதை விட அது வந்து பல நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்துவிட்டு போய் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லோரும் ஏதோ மறுஜென்மம் எடுத்து இருக்கிற மாதிரியும் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று சந்தோஷப்படுகிற மாதிரியும் வைத்துவிட்டுப் போய் இருக்கிறது.”

இவ்வாறு ராய் லட்சுமி கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan