ரசிகரை வீட்டுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சிரஞ்சீவி

ரசிகரை வீட்டுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சிரஞ்சீவி

தெலுங்கு திரைப்படம் உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி தன்னுடைய ரசிகர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஜார் தெரு விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுதீர் ராயல் (வயது 27). இவர் நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர். பள்ளிப்பட்டு பகுதியில் அவரது பெயரில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். இந்த மன்றத்தின் மூலம் நற்பணிகளை செய்து வருகிறார். இவர் இதுவரை 7 ரத்த தான முகாம்களை தனது சொந்த செலவில் நடத்தி 700 யூனிட் ரத்தத்தை சேகரித்து முக்கிய ஆஸ்பத்திரிகளுக்கு இலவசமாக வழங்கி உள்ளார். இந்த செயல் நடிகர் சிரஞ்சீவியின் கவனத்துக்கு சென்றது.

அவர் உடனடியாக சுதீர்ராயலை தொடர்பு கொண்டு அவரை தனது வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர் சுதீர் ராயல் ஐதராபாத் சென்று நடிகர் சிரஞ்சீவியை சந்தித்தார். சுதீர் ராயலுக்கு நடிகர் சிரஞ்சீவி தனது வீட்டிலேயே விருந்து கொடுத்தார். மேலும் அவரது சேவையை பாராட்டி அவருடன் பேசி மகிழ்ந்தார். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்து அவருக்கு நினைவு பரிசை வழங்கி மகிழ்வித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan