செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீடு அப்டேட்

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீடு அப்டேட்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இப்படத்தின் பட விளம்பரம் மற்றும் விளம்பர ஒட்டி, பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படம் எடுக்கப்பட்டு 5 வருடங்கள் ஆனாலும், சில காரணங்களால் இன்று வரை ரிலீசாகாமல் உள்ளது.

இந்நிலையில், இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan