ஆபாச படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது

ஆபாச படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், ஆபாச படம் எடுத்ததால் கைதாகி உள்ளார்.

தமிழில் 2016-ல் திரைக்கு வந்த பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் கெஹனா வசிஸ்த். ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். கெஹனா வசிஸ்த் சமீபத்தில் கணினிமய சேனல் தொடங்கி அதில் ஆபாச காணொளிக்களை பதிவேற்றி வந்துள்ளார். அந்த படங்களை பார்க்க ரூ.2 ஆயிரம் செலுத்தி சந்தாதாரர் ஆகவேண்டும். 

பலர் பணம் கட்டி படம் பார்த்துள்ளனர். இதற்காக மும்பை மலாட் மல்வானி பகுதியில் உள்ள தனி பங்களாவில் இளம் பெண்களை வைத்து ஆபாச படங்கள் தயாரித்து வந்துள்ளார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் அந்த பங்களாவில் சோதனை நடத்தி அங்கிருந்த 2 ஆபாச பட நடிகர்கள். ஒரு பெண் புகைப்பட கலைஞர், ஒரு இளம் பெண் ஆகியோரை கைது செய்தனர்.

 

கெஹனாவும், கைது செய்யப்பட்டார். விசாரணையில் இதுவரை 87 ஆபாச காணொளிக்களை தயாரித்து பதிவேற்றியது தெரிய வந்துள்ளது. ஆபாச படம் தயாரித்த நடிகை கைதாகி இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan