தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமணம் – பிரபலங்கள் நேரில் வாழ்த்து

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமணம் – பிரபலங்கள் நேரில் வாழ்த்து

யா யா மற்றும் பக்ரீத் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் அவர்களின் மகள் திருமணத்தில் பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

சந்தானம், சிவா நடித்த யா யா மற்றும் விக்ராந்த், வசுந்தரா நடித்த பக்ரீத் படங்களை தயாரித்தவர் எம்.எஸ். முருகராஜ். இவரின் மகள் மருத்துவர் லாவண்யா முருகராஜ், மருத்துவர் ரூபன் எழுமலை அவர்களின் திருமணம் செங்கல்பட்டில் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் இயக்குனர் ஹரி அவரது மனைவி ப்ரிதா, நடிகர்கள் பொன்வண்ணன், ரவி மரியா, ஜெரால்ட், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ரெட் ஜெயன்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்த கோபால், பூச்சி முருகன், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், தங்கராஜ், வின்னர் ராமசந்திரன், கலை இயக்குனர் கதிர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan